அ.தி.மு.க. முன்னாள் எம்.பி..ராதாகிருஷ்ணன் மரணம்

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ணன் மரணம் அடைந்தார்.

Update: 2022-12-11 19:22 GMT

சிவகாசி, 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வடபட்டியை சேர்ந்தவர் டி.ராதாகிருஷ்ணன்(வயது 67). இவரது தந்தை தர்மர். தாயார் சின்னதாயம்மாள். டி.ராதாகிருஷ்ணன், ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக பணியாற்றி உள்ளார். சிவகாசி யூனியன் தலைவராக 1986 முதல் 1991-ம் ஆண்டு வரையும், 1996 முதல் 2001 வரையும், 2011 முதல் 2014 வரை என 3 முறை இருந்துள்ளார். பின்னர் 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க. சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு 2 மனைவியும், 1 மகனும், 3 மகள்களும் உள்ளனர். உடல் நலக்குறைவால் ராதாகிருஷ்ணன் நேற்று மாலை இறந்தார். இவரது மறைவுக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்