அ.தி.மு.க. கொடி, சின்னத்தை ஓ.பி.எஸ். பயன்படுத்த தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்குகிறது.
சென்னை,
அ.தி.மு.க.வின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில், இரு தரப்பில் இருந்தும் காரசார வாதங்கள் நிறைவுபெற்றது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், அ.தி.மு.க. கொடி, சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது. இந்த சூழலில், ஓ.பன்னீர்செல்வம் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.