ஆலந்தூர் மின்வாரிய அலுவலகத்தில் அ.தி.மு.க- தி.மு.க. மோதல் - புகார் கொடுக்க வந்தபோது சம்பவம்

ஆலந்தூரில் மின்வெட்டு குறித்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வளர்மதி மனு கொடுக்க வந்தபோது மின்வாரிய அலுவலகத்தில் அ.தி.மு.க- தி.மு.க.வினரிடையே மோதல்ஏற்பட்டது.

Update: 2023-06-06 07:44 GMT

சென்னையை அடுத்த ஆலந்தூர் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே மின்வெட்டை சரி செய்யவும், கூடுதல் டிரான்ஸ்பார்மர்களை அமைக்க கோரி மனு அளிக்க முன்னாள் அமைச்சர் வளர்மதி, அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆலந்தூர் மின் வாரிய அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் ஆலந்தூர் மின்சார வாரிய செயற் பொறியாளரை சந்தித்து இது தொடர்பான மனு ஒன்றை அளித்தனர்.

அப்போது மின்சார வாரிய அலுவலகத்திற்கு வந்த தி.மு.க நிர்வாகிகள் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் மின்சார பாதிப்பு ஏற்பட்டதாக கூறி கோஷம் போட்டனர். அப்போது முன்னாள் அமைச்சர் வளர்மதி மீண்டும் மின்வெட்டு ஏற்பட்டாமல் அ.தி.மு.க சார்பில் போராட்டம் நடக்கும் என கூறி விட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறினார். வெளியே வந்த போது தி.மு.க- அ.தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு வந்த பரங்கிமலை போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்