பகண்டை கூட்டுரோட்டில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் நடந்தது

மின்கட்டண உயர்வை கண்டித்து பகண்டை கூட்டுரோட்டில் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-09-16 18:45 GMT

ரிஷிவந்தியம், 


கண்டன ஆர்ப்பாட்டம்

மின் கட்டணத்தை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ரிஷிவந்தியம் அருகே பகண்டை கூட்டு்ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மோகன், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் முன்னாள் எம்.பி., காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. க்கள் பிரபு, அழகுவேலுபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் கதிர் தண்டபாணி வரவேற்றார்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் குமரகுரு பேசியதாவது:-

பொய்யான வாக்குறுதி

பொய்யாக வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி தி.மு.க. ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு தி.மு.க. கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப், மகளிருக்கு விலையில்லா ஸ்கூட்டர் போன்ற பல்வேறு திட்டங்களை திமுக அரசு ரத்து செய்துள்ளது. மின்கட்டணத்தை குறைப்பதாகவும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வசூலிக்கப்படும் மின் கட்டணத்தை மாதந்தோறும் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி ஆட்சியைப் பிடித்த தி.மு.க. அரசு தற்போது மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 500 முதல் 1000 ரூபாய் வரை மின் கட்டணம் உயரும். இதுதவிர விலைவாசியும், பஸ் கட்டணமும் உயரபோகிறது. ஆகவே உடனடியாக மக்களை வஞ்சிக்கும் மின்கட்டண உயர்வை தி.மு.க. அரசு வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கண்டன கோஷம்

முன்னதாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் இணையதலைவர் ராஜசேகர், மாவட்ட அவைத்தலைவர் பச்சையாப்பிள்ளை, ஜெயலலிதா பேரவை செயலாளர் ஞானவேல், ஒன்றிய செயலாளர்கள் அருணகிரி, துரைராஜ், தேவேந்திரன், சந்தோஷ், அரசு, கிருஷ்ணமூர்த்தி, அய்யப்பா, பழனி, நகர செயலாளர் பாபு, ரமேஷ், தகவல் தொழில் நுட்பப்பிரிவு கிருஷ்ணமூர்த்தி மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்