அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்

செங்கோட்டையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.;

Update: 2023-07-19 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி தலைமை தாங்கினார். மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.எம். ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் வி.பி. மூர்த்தி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், "வருகிற ஆகஸ்ட் 20-ந் தேதி மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநில மாநாடான "வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில்" பெருவாரியான இளைஞர்களை கலந்து கொள்ள வைக்க வேண்டும். இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு தகுதியான இளைஞர்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் எனவும் ஆலோசனைகள் வழங்கினார்.

கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு சிவஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.ஆர்.ராமசந்திரன், வேல்முருகன், செல்லப்பன், வாசுதேவன், ஜெயகுமார், நகர செயலாளர்கள் கணேசன், ஆறுமுகம், பேரூர் கழக செயலாளர்கள் டாக்டர் சுசீகரன், கார்த்திக் ரவி, முத்து குட்டி, சேவக பாண்டியன், தலைமை கழக பேச்சாளர் தீக்கணல் லட்சுமணன், சசிகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் சண்முகையா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்