அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை

திருப்பத்தூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை 29-ந் தேதி தொடங்குகிறது.

Update: 2023-05-26 18:51 GMT

திருப்பத்தூர்அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024-ம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு இளநிலை மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 29-ந் தேதி தொடங்குகிறது. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், தேசிய மாணவர் படை, அந்தமான் நிக்கோபார், சிறப்பு பாதுகாப்பு படை வீரர் போன்றவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு 29-ந் தேதி முதல் 31-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

மேலும் மாணவ, மாணவிகள் சேர்க்கை குறித்த அனைத்து தகவல்களும் www.gasctpt.edu.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். அதனை பார்த்து மாணவ மாணவிகள் தெரிந்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் சீனுவாசகுமரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்