அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசார வாகனம்

திருக்காட்டுப்பள்ளியில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசார வாகனத்தை பேரூராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.

Update: 2023-04-21 20:49 GMT

திருக்காட்டுப்பள்ளி:

திருக்காட்டுப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் இருந்து அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு பூதலூர் வட்டார கல்வி அலுவலர்கள் ரமாபிரபா, கோமதி ஆகியோர் தலைமை தாங்கினர். நிகழ்ச்சியில் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி தலைவர் மெய்யழகன், பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன், பேரூராட்சி துணைத் தலைவர் ரமணி, கவுன்சிலர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர். இந்த வாகனம் தமிழக அரசு பள்ளிகளில் உள்ள வசதிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள், இட ஒதுக்கீடு பயன்பாடுகள் ஆகியவற்றை விளக்கும் வகையில் திருக்காட்டுப்பள்ளி சுற்று வட்டார கிராமங்களுக்கு சென்று பிரசார பணிகளில் ஈடுபடும். முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் முருகானந்தம் வரவேற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்