அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு
வேலூர் கோர்ட்டில் நடந்து வரும் அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விழுப்புரத்தை சேர்ந்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி வசந்தலீலா வழக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.