கூடலூரில் ஆற்றில் மூழ்கி ஆதிவாசி பலி

கூடலூரில் ஆற்றில் மூழ்கி ஆதிவாசி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-08-23 10:32 GMT

கூடலூர்

கூடலூரில் ஆற்றில் மூழ்கி ஆதிவாசி பரிதாபமாக இறந்தார்.

கூலித்தொழிலாளி

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட ஏழுமுறம் ஆதிவாசி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் பூபாலன் (வயது 32).  வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து கூலி வேலை செய்வதற்காக புறப்பட்டு சென்றார். பின்னர் மாலையில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள ஆற்றின் கரையோரம் பூபாலன் நின்று கொண்டிருந்தார். இந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக திடீரென ஆற்றுக்குள் தவறி விழுந்தார்.

ஆற்றில் மூழ்கினார்

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சிறிது நேரத்திலேயே நீரில் மூழ்கி பூபாலன் இறந்தார். தகவல் அறிந்த கூடலூர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு உடலை கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்