ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனர் நிகர் ஷாஜிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு..!

ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனர் நிகர் ஷாஜிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-03 09:43 GMT

சென்னை,

சூரியனை ஆய்வுசெய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனர் நிகர் ஷாஜிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையில் பிறந்து, சூரியனை ஆய்வுசெய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ்ப் பெண்மணி நிகர் ஷாஜியை அகமகிழ்ந்து பாராட்டுகிறேன்.

தமிழ்நாட்டின் மாநில அரசுப் பள்ளி, கல்லூரி, பாடத்திட்டத்தில் பயில்பவர்கள் திறத்திலும் தரத்திலும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதைத் தொடர்ந்து சந்திரயான் முதல் ஆதித்யா வரை நம் சாதனைத் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர்.

இஸ்ரோவின் பெருமைமிகு திட்டத்துக்கு நிகர் ஷாஜி தலைமைப் பொறுப்பேற்றிருப்பதைப் பார்த்து அவர் குடும்பத்தினர் எத்தகைய பூரிப்பை, பெருமையை அடைந்திருக்கிறார்களோ அதே அளவுக்கு நானும் பெருமிதம் கொள்கிறேன்!" என்று தெரிவித்து உள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்