ஆதிநாதர் ஆழ்வார் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

Update: 2023-05-01 19:00 GMT

தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

ஆதிநாதர் ஆழ்வார் கோவில்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி கோவில்களில் ஒன்பதாவது திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் வெகு சிறப்பாக நடைபெறும்.

அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை சுவாமி பொலிந்துநின்ற பிரான் வீதி உலா வருதல் நடைபெற்றது.

தேரோட்டம்

விழாவின் 9-ம் நாளான நேற்று சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், தீபாராதனை, நித்தியல் கோஷ்டி நடைபெற்றது. பின்னர் சுவாமி பொலிந்து நின்ற பிரான் காலை 6.30 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார். 7.15 மணிக்கு பக்தர்கள் கோவிந்தா கோபாலா பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரதவீதிகளை சுற்றி வந்த தேர் காலை 10 மணிக்கு நிலையம் வந்தடைந்தது.

தேரோட்டத்தில் இணை ஆணையர் அன்புமணி, கோவில் செயல் அலுவலர் அஜித், தக்கார் கோவல மணிகண்டன், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்