சொத்துவரி சீராய்வு மூலம் ரூ.2 கோடி கூடுதல் வருமானம்

திருவாரூர் நகராட்சிக்கு சொத்துவரி சீராய்வு மூலம் ரூ.2 கோடி கூடுதல் வருமானம் கிடைத்துள்ளதாக நகரசபை கூட்டத்தில் தலைவர் புவனப்பிரியா செந்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-13 18:45 GMT


திருவாரூர் நகராட்சிக்கு சொத்துவரி சீராய்வு மூலம் ரூ.2 கோடி கூடுதல் வருமானம் கிடைத்துள்ளதாக நகரசபை கூட்டத்தில் தலைவர் புவனப்பிரியா செந்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

நகரசபை கூட்டம்

திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் நகரசபை அவசரக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகரசபை தலைவர் புவனப்பிரியா செந்தில் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், நகராட்சி ஆணையர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நகரசபை தலைவர் பேசுகையில், திருவாரூர் நகராட்சி 1914-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு 1978 முதல் முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இயங்கி வருகின்றது. வளர்ந்து வரும் மாவட்ட தலைநகரங்களில் திருவாரூர் நகரமும் ஒன்றாகும்.மேலும் 2022-23-ஆண்டில் பொது சொத்து வரி சீராய்வு மூலம் ரூ.2.05 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது.

முதல்நிலை நகராட்சியாக..

இதனால் திருவாரூர் நகராட்சியை முதல்நிலை நகராட்சியில் இருந்து தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தி ஆணை பிறப்பிக்க நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதைதொடர்ந்து திருவாரூர் நகராட்சியை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வழங்கியதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் வாரை பிரகாஷ், செந்தில், நகராட்சி என்ஜினீயர் அய்யப்பன், மேலாளர் முத்துக்குமார் மற்றும் உறுப்பினர்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்