மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தை கூடுதல் கலெக்டர் ஆய்வு

ஆனைமலை அருகே மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் இலங்கை அகதிகளுக்கு வீடு கட்டும் பணியையும் பார்வையிட்டார்.

Update: 2023-01-29 18:45 GMT

ஆனைமலை

ஆனைமலை அருகே மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் இலங்கை அகதிகளுக்கு வீடு கட்டும் பணியையும் பார்வையிட்டார்.

வீடு கட்டும் பணி

ஆனைமலையை அடுத்த ஆழியாறு, கோட்டூர் ஆகிய பகுதிகளில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. அதில் கோட்டூர் பகுதியில் சுமார் 587 பேரும், ஆழியாறு பகுதியில் சுமார் 765 பேரும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள வீடுகள் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் அந்த வீடுகளை இடித்துவிட்டு, புதிய வீடுகள் கட்டித்தர இலங்கை அகதிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்று ரூ.2 கோடியே 14 லட்சத்து 50 ஆயிரம் செலவில் ஊரக வளர்ச்சி துறை மூலம் புதிய வீடுகள் கட்டி கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கோட்டூரில் பழுதடைந்த வீடுகளை இடித்து அகற்றிவிட்டு புதிதாக 112 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோன்று ஆழியாறு பகுதியில் 317 வீடுகள் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு, ஆரம்ப கட்ட பணிகள் மேற்கொள்ள உள்ளது.

கூடுதல் கலெக்டர் ஆய்வு

இந்த பணிகளை கோவை மாவட்ட கூடுதல் கலெக்டர் அலர்மேலு மங்கை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டிடத்தின் தரம், பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து கெங்கம்பாளையத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.6½ கோடியில் தரைப்பாலம் அமைக்கும் பணியையும், அங்கலக்குறிச்சியில் கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தையும் கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், செயற்பொறியாளர் (பொறுப்பு) முனிராஜ், உதவி செயற்பொறியாளர் செந்தில், பொறியாளர் பாலகணேஷ் மற்றும் தேவி மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்