படகில் பதுக்கிய 6 லட்சம் போதை மாத்திரைகள் சிக்கின

இலங்கைக்கு கடத்த படகில் பதுக்கிய 6 லட்சம் போதை மாத்திரைகளை போலீசார் கைப்பற்றினர்.

Update: 2023-01-05 18:45 GMT

பனைக்குளம், 

6 லட்சம் மாத்திரைஇலங்கைக்கு கடத்த படகில் பதுக்கிய 6 லட்சம் போதை மாத்திரைகளை போலீசார் கைப்பற்றினர்.கள்.

போதை மாத்திரை

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு சில பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. எனவே போலீசார் வேதாளை தெற்கு கடற்கரை பகுதிக்கு நேற்று விரைந்து சென்று பல இடங்களில் சோதனையிட்டனர்.

அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த நாட்டு படகில் சோதனை செய்தபோது, அந்த படகில் 10 பெட்டிகள் இருந்தன. பிளாஸ்டிக் சாக்குகளை தைத்து, அதனுள் அந்த பெட்டிகளை வைத்திருந்தனர். அதை பிரித்து பார்த்தபோது பெட்டிகளில் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இந்த மாத்திரைகள் போதைக்காகவும் பயன்படுத்துவதாக கூறுகிறார்கள். மொத்தம் 6 லட்சம் மாத்திரைகள் அவற்றில் இருந்தன. புதிய செல்போன் ஒன்றும் இருந்தது. அவற்றை கைப்பற்றிய கியூ பிரிவு போலீசார், அதை மண்டபம் போலீசில் ஒப்படைத்தனர். மாத்திரைகளின் மதிப்பு சுமார் ஒரு கோடியே 20 லட்ச ரூபாய் இருக்கும் என்று தெரியவருகிறது.

போலீசார் தீவிர விசாரணை

படகில் உள்ள பதிவு எண்ணை வைத்து அந்த படகு யாருக்கு சொந்தமானது? அதில் மாத்திரைகளை ஏற்றி இலங்கைக்கு கடத்த முயன்றது யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்