ஆறுமுகநேரியில் அதிக உறுப்பினர்களை சேர்த்ததி.மு.க. நிர்வாகிகளுக்கு பரிசு
ஆறுமுகநேரியில் அதிக உறுப்பினர்களை சேர்த்த தி.மு.க. நிர்வாகிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியில் அதிக எண்ணிக்கையில் தி.மு.க. உறுப்பினர்களை ேசர்த்த நிர்வாகிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி மற்றும் மெயின் பஜாரில் நகர தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் நவநீத பாண்டியன் தலைமை தாங்கினார். நகர பஞ்சாயத்து துணை தலைவர் அ. கல்யாணசுந்தரம் தி.மு.க. அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் கட்சிக்கு அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை சேர்த்த 6 நிர்வாகிகளுக்கு ஒரு கிராம் தங்க நாணயமும், 18 நிர்வாகிகளுக்கு 10 கிராம் வெள்ளி நாணயத்தையும் வழங்கினார். நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.