ஓய்வூதியர்கள் நேர்காணல் மாதம் குறித்து அறிந்து கொள்ள நடவடிக்கை

ஓய்வூதியர்கள் நேர்காணல் மாதம் குறித்து அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.;

Update:2023-07-01 01:06 IST

ஓய்வூதியர்கள் ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய குறிப்பிட்ட 3 மாதங்களில் நேர்காணல் செய்யப்படுவதால், அதிக அளவிலான ஓய்வூதியர்கள் கருவூலத்தில் காத்திருக்கின்றனர். காத்திருந்து நேர்காணல் செய்வதை எளிமையாக்கும் நோக்கத்தில் சிவில் ஓய்வூதியம் பெறுபவர்களாக இருப்பின் தாங்கள் ஓய்வு பெற்ற மாதத்திலும், குடும்ப ஓய்வூதியம், சிறப்பு ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களுக்கு ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதத்திலும், சிவில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் தாங்கள் ஓய்வு பெற்ற மாதத்திலும் நேர்காணல் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு தாங்கள் ஓய்வு பெற்ற மாதம், தங்களுக்கு குடும்ப ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதம் தெரியாத நிலையில் தங்களுக்கு விருப்பமான எந்த மாதத்திலும் 2023-ம் ஆண்டிற்கான நேர்காணல் செய்து கொள்ளலாம். மேற்கண்ட நடைமுறையின்படி ஒவ்வொரு ஓய்வூதியர்களுக்கு தாங்கள் எந்த மாதம் நேர்காணல் செய்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஓய்வூதியர்களின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும். மேலும் WWW.Karuvoolam.tn.gov.in என்ற இணையத்தின் மூலமாக ஓய்வூதியர்கள் தங்களது நேர்காணல் மாதம் குறித்து அறிந்து கொள்ளவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்