இந்திய பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்திய பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் நிலையை தவிர்க்க மத்திய நிதி அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-10-05 18:45 GMT

பொருளாதார வளர்ச்சி

நடப்பு 2023-24-ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்க வாய்ப்புள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தது. தற்போதைய நிலையில் இதில் ஏதேனும் பிரச்சினைக்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்திருந்தது.

ஆனாலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்திய பொருளாதார வளர்ச்சியில் நடப்பு நிதியாண்டில் உடனடியாக பாதிப்பு ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை என்று கருதினாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகும் என கருதப்படுகிறது.

பணவீக்கம்

கடந்த ஜூலை மாதம் உணவு பொருட்களின் விலை உயர்வு காரணமாக பணவீக்கம் 7 சதவீதத்தை எட்டியது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.அரிசி ஏற்றுமதிக்கு தடை, கோதுமை இருப்பு மற்றும் விற்பனையில் கட்டுப்பாடு என்பன உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் தற்போது உணவு பொருட்களின் விலை குறைய தொடங்கியுள்ளது. எனினும் ஆகஸ்டு மாதம் 21 சதவீத மழை குறைந்த நிலையில் இதன் பாதிப்பு உணவு பொருள் விளைச்சலில் ஏற்பட்டால் மீண்டும் உணவு பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் நிலையில் பண வீக்கம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் பொருளாதார வளர்ச்சியிலும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தேவை

இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் என கருதப்படும் நிலையில் மத்திய அரசு இதனை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சகம் தனது ஆகஸ்டு மாதத்திற்கான அறிக்கையில் இது பற்றி குறிப்பிட்டுள்ளது.

எனவே பொருளாதார வளர்ச்சியில் மாற்றம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்