நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நன்னிலம் போலீஸ் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினா் மனு அளித்தனர்.
நன்னிலம்;
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் போலீஸ் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சியினர் மீது தொடர்ச்சியாக நடிகை விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி ஆகியோர் அவதூறு பரப்பி வருகிறார்கள். மேலும் பொய் புகார் அளித்து பகை உணர்வை தூண்டி சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி வருகிறார்கள். எனவே நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. அப்போது மாவட்ட செயலாளர் இக் பால்தின், தொகுதி செயலாளர் தமிழ்வாணன், நகர செயலாளர் ஞானசேகரன், மகளிர் பாசறையை சேர்ந்த நித்தியா, முத்து நாச்சியார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.