மத கலவரத்தை தூண்டும் வகையில் துண்டு பிரசுரம் வினியோகிப்பவர்கள் மீது நடவடிக்கை; போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
மத கலவரத்தை தூண்டும் வகையில் துண்டு பிரசுரம் வினியோகிப்பவர்கள் மீது நடவடிக்கை; போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு;
இந்து முன்னணி ஈரோடு மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
சென்னிமலை பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒரு அமைப்பினர் சென்னிமலை குறித்து மத மோதல்கள் ஏற்படுத்தும் விதமாக பேசினர். இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் சென்னிமலையில் ஒரு அமைப்பினர் சென்னிமலை மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, மத கலவரத்தை தூண்டும் வகையில் துண்டுபிரசுரம் வினியோகித்து வருகின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.