மெட்ரோ ரெயில் நிலைய வாசலில் படுத்திருந்தவர்கள் மீது ஆசிட் வீச்சு

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரெயில் நிலைய வாசலில் படுத்திருந்த சாலையோர மக்கள் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2024-05-19 22:32 IST
மெட்ரோ ரெயில் நிலைய வாசலில் படுத்திருந்தவர்கள் மீது ஆசிட் வீச்சு

ஆலந்தூர்,

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள மெட்ரோ ரெயில் நிலைய பகுதியில் சாலையோரம் வசிக்கக் கூடிய மக்கள் படுத்து உறங்கியுள்ளனர்.

அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், அவர்கள் மீது ஆசிட் பாட்டிலை வீசி உள்ளனர். இந்த ஆசிட் வீச்சு சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 5 க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்துள்ளனர்.

அந்த பகுதி முழுவதும் ஆசிட் நெடி வீசி வருவதுடன் கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து கிண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிட் வீச்சு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்