போலீஸ் எனக்கூறி மூதாட்டியிடம் 2 பவுன் சங்கிலி திருட்டு
பட்டுக்கோட்டையில், போலீஸ் எனக்கூறி மூதாட்டியிடம் 2 பவுன் சங்கிலியை திருடிச் சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2 பவுன் நகை திருட்டு
அவர்களை உண்மையான போலீஸ் என்று நம்பிய சாரதாம்பாள், அவர்களது யோசனைப்படி கழுத்தில் அணிந்திருந்த தன்னுடைய 2 பவுன் சங்கிலியை கழற்றி பேப்பரில் மடித்தார். அதனை பெற்ற அந்த 2 மர்ம நபர்களும் மூதாட்டியின் பையில் வைப்பது போல நடித்து பத்திரமாக வீட்டுக்கு செல்லுங்கள், வீட்டிற்கு சென்றவுடன் எடுத்து அணிந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். வீட்டுக்கு சென்றதும் பையை திறந்து பார்த்தபோது அவர் மடித்து வைத்திருந்த 2 பவுன் சங்கிலியை காணாமல் திடுக்கிட்டார். அப்போது அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீசில் சாரதாம்பாள் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து, போலீஸ் என்று கூறி மூதாட்டியிடம் 2 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.