விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணி

தியாகதுருகத்தில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணி

Update: 2022-10-22 18:45 GMT

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் தீயணைப்பு நிலையம் சார்பில் விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு பேரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் சரவணன் தலைமை தாங்கி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் கவிதா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சசி வரவேற்றார்.

இந்த பேரணியில் கலந்துகொண்ட மாணவிகள் விபத்தில்லாமல் தீபாவளியை கொண்டாடுவோம், பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடிப்போம், கூட்ட நெரிசலை தவிர்த்து பட்டாசுகளை வெடிப்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி கடைவீதி, பஸ் நிலையம் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது. முன்னதாக பள்ளி வளாகத்தில் கார்த்திகேயன், ராஜா, அருணாச்சலம் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழுவினர் மாணவிகளுடன் இணைந்து பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். இதில் ஆசிரியர்கள் பாலசுப்பிரமணியன், ஜெயசுதா, விருத்தாம்பாள் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்