மோட்டார்சைக்கிள் மோதி மூதாட்டி சாவு
மோட்டார்சைக்கிள் மோதி மூதாட்டி சாவு இறந்தார்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே உள்ள சொக்கத்தவன்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா மகன் சுரேஷ் (வயது 19). இவர் நட்டாப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நாட்டாபட்டியை சேர்ந்த மாணிக்கம் மனைவி சந்திரா (65) சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மூதாட்டி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சந்திரா மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து வாலாந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.