மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதல்; முதியவர் பலி
மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதியதில் முதியவர் பலியானார்.
பழனி அருகே உள்ள தொப்பம்பட்டியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 67). இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் தொப்பம்பட்டியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பகுதியில் பழனி நோக்கி சென்ற சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த பன்னீர்செல்வத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.