லாரி மோதி வாலிபர் பலி-நண்பர் படுகாயம்
லாரி மோதி வாலிபர் பலியானார். அவருடன் வந்த நண்பர் படுகாயம் அடைந்தார்.
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகன் மனோஜ் (வயது 23). இவருடைய நண்பர் தாகீர் (24). கூலித்தொழிலாளிகளான இவர்கள் இருவரும் நேற்று வீராணத்தில் இருந்து சேலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தனர். மோட்டார் சைக்கிளை மனோஜ் ஓட்டி சென்றார். குப்பனூர் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த மனோஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த நண்பர் தாகீர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாகீரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.