திம்பம் மலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து; டிரைவர் உயிர் தப்பினார்
திம்பம் மலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து; டிரைவர் உயிர் தப்பினார்
சத்தியமங்கலம்
கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து தக்காளியை ஏற்றிக்கொண்டு ஈரோடு மாவட்டம் கோபிக்கு சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வேனை கோபியை சேர்ந்த மாசிலாமணி (வயது 40) என்பவர் ஓட்டி சென்றார்.
சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதை 3-வது சுற்றில் நேற்று முன்தினம் இரவு சரக்கு வேன் சென்றபோது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதில் சரக்கு வேனில் இருந்து தக்காளிகள் சிதறி ரோடு முழுவதும் கிடந்தது. ரோட்டோரம் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. இந்த விபத்தில் டிரைவர் மாசிலாமணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.