மினிவேன் மோதி விவசாயி பலி

பேராவூரணி அருகே மினிவேன் மோதி விவசாயி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-11-22 19:00 GMT

நேரு

பேராவூரணி அருகே மினிவேன் மோதி விவசாயி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

விவசாயி

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நேரு (வயது55). விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இந்த நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் செங்கமங்கலம் கிராமத்தில் இருந்து பேராவூரணி பெரியகுளம் அருகே நேரு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பேராவூரணியில் இருந்து ஆவணம் நோக்கி வந்து கொண்டிருந்த மினி வேன் பெரியகுளம் அருகே வளைவில் திரும்பும்போது எதிரே வந்த நேருவின் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

சம்பவ இடத்தில் பலி

இந்த விபத்தில சம்பவ இடத்திலேயே நேரு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நேருவின் உடலை கைப்பற்றி பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தை தொடர்ந்து மினி வேனை ஓட்டி வந்த டிரைவர் சம்பவ இடத்திலேயே மினி வேனை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்