நாமக்கல் அருகே அரசு பஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி மற்றொருவர் படுகாயம்

நாமக்கல் அருகே அரசு பஸ், மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-09-19 18:45 GMT

நாமக்கல் அருகே அரசு பஸ், மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

தொழிலாளர்கள்

நாமக்கல் அருகே உள்ள வள்ளிபுரத்தை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் ரஞ்சித் (வயது 20). ராசாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர்கள் 2 பேரும் கோழிப்பண்ணைகளில் கூண்டு அமைக்கும் தொழில் செய்து வந்தனர்.

இவர்கள் நேற்று இரவு 9 மணி அளவில் வள்ளிபுரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் நாமக்கல் பஸ் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். காவேட்டிப்பட்டி அருகே வந்தபோது நாமக்கல்லில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி சென்ற அரசு பஸ்சும், இவர்களது மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி கொண்டன.

வாலிபர் பலி

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரஞ்சித் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் சென்ற விக்னேஷ் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்