கோபியில் தடுப்புச்சுவரில் மோதி சரக்கு வேன் கவிழ்ந்தது; டிரைவர் உயிர் தப்பினார்
கோபியில் தடுப்புச்சுவரில் மோதி சரக்கு வேன் கவிழ்ந்தது; டிரைவர் உயிர் தப்பினார்
கடத்தூர்
சத்தியமங்கலத்தில் இருந்து கோபி நோக்கி சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வேன் கோபி போலீஸ் நிலையம் அருகே சென்றபோது ரோட்டின் நடுவே வைக்கப்பட்டு இருந்த தடுப்புச்சுவரில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் சரக்கு வேன் தலைகுப்புற கவிழ்ந்தது.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே ஓடி வந்து சரக்கு வேனை மீட்டனர். இந்த விபத்தில் டிரைவர் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினார்.