குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

நெல்லையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Update: 2023-06-12 20:06 GMT

இந்திய அரசியல் அமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமையாகும். எனவே அவர்களை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்தக் கூடாது. இதனை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. காவல்துறை அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதி மொழியை வாசித்து ஏற்றுக்கொண்டார்.

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காவல்துறையினர், அமைச்சு பணியாளர்கள் முன்னிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் குழந்தை தொழிலாளர் உறுதி மொழியை வாசித்து ஏற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன், மாவட்ட குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு பொன் ரகு, இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

அதேபோல் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மூர்த்தி, தாசில்தார்கள், அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்