கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Update: 2023-02-09 17:31 GMT

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.

கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்தில் கொண்டு, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும்,

கொத்தடிமைத் தொழிலாளர் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளங்கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயற்படுவேன் என்று உறுதிமொழி ஏற்றுகொண்டனர்.

அதைத்தொடர்ந்து கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், தனித்துணை கலெக்டர் கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்