நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: செப்பு தேரில் காந்திமதி அம்பாள் வீதிஉலா

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி செப்பு தேரில் காந்திமதி அம்பாள் வீதிஉலா நடந்தது.

Update: 2023-07-20 20:51 GMT

நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் கடந்த 12-ந்தேதி முதல் ஆடிப்பூர திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 4-வது நாளில் அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது.

9-வது நாள் திருவிழாவான நேற்று காலை காந்திமதி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட செப்பு தேரில் எழுந்தருளினார். பின்னர் 4 ரதவீதிகளில் தேர் வலம் வந்தது. இந்த தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) மாலை அம்பாள் சன்னதியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு சீர்வரிசையுடன் முளைக்கட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தலைமையில் பக்தர்கள், ஊழியர்கள் செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்