மது பாட்டில்களை கடத்தி வந்த வாலிபர் கைது

மது பாட்டில்களை கடத்தி வந்த வாலிபர் கைது

Update: 2022-10-25 18:45 GMT

திங்கள்சந்தை :

இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்மூர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் குருந்தன்கோட்டில் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், 60 மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், குழிக்கோடு வண்டாவிளையை சேர்ந்த விஜின்(வயது 35) என்பதும், அரசு மதுக்கடையில் இருந்து வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 60 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விஜினை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்