நகைக்கடையில் திருடிய பெண் சிக்கினார்
கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் நகைக்கடையில் திருடிய பெண் சிக்கினார்
காந்திபுரம்
கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் நகை கடை வைத்து இருப்பவர் விஜயகுமார் (வயது 67). அவருடைய கடையில் நேற்று முன்தினம் வாடிக்கையாளர் கூட்டம் இருந்தது.
அதை பயன்படுத்தி நகை வாங்க வந்த பெண் ஒருவர் 3 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் ரூ.75 ஆயிரத்தை நைசாக திருடி விட்டு தப்பி சென்றார்.
இது குறித்து காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் இளம்பெண் தங்கநகை மற்றும் பணத்தை திருடும் காட்சி பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த டயானா கிறிஸ்டி (25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.