ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 21 பவுன் சங்கிலி பறிப்பு

ஆரணியில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 21 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-11-19 12:56 GMT

ஆரணி

ஆரணியில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 21 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

21 பவுன் சங்கிலி பறிப்பு

ஆரணி கொசப்பாளையம் தாண்டவராயன் தெருவை சேர்ந்த நாட்டு மருந்து கடை வியாபாரி ஏழுமலை என்பவரின் மருமகள் ஈஸ்வரி (வயது 60). ஏழுமலை இறந்ததும் நாட்டு மருந்து கடையை மகன் மூலமாக ஈஸ்வரி கவனித்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு ஈஸ்வரி ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

வீட்டின் அருகில் செல்லும்போது இவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் முன்பாக சென்று பின்னர் அவருக்கு எதிரே வந்து ஈஸ்வரியின் கழுத்தில் அணிந்து இருந்த 21 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் ஈஸ்வரி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பு.புகழ், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி, மகேந்திரன் உள்பட போலீசார் விரைந்து வந்து இரவு முழுவதும் மர்ம நபர்களை தேடினர்.

ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்கள் உருவம் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்