நோய்வாய்ப்பட்ட கணவரை அடித்துக்கொன்று தற்கொலை நாடகமாடிய பெண்

நோய்வாய்ப்பட்ட கணவரை அடித்துக்கொன்றுவிட்டு அவர் தற்கொலை செய்ததாக நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-22 19:27 GMT

ராஜபாளையம்,

நோய்வாய்ப்பட்ட கணவரை அடித்துக்கொன்றுவிட்டு அவர் தற்கொலை செய்ததாக நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டார்.

உடல்நலக்குறைவு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் காமராஜர்நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தனமாரியப்பன் (வயது 46). இவருடைய மனைவி பாண்டிசெல்வி (44). இவர்களுக்கு 2 மகள்கள். ஒருவருக்கு திருமணமாகிவிட்டது. சந்தனமாரியப்பன் கடந்த 13 ஆண்டு காலமாக உடல்நலக்குறைவால் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலே இருந்துள்ளார். ஆதலால் பாண்டிசெல்வி கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார்.

நாடகமாடிய மனைவி கைது

சம்பவத்தன்று சந்தனமாரியப்பன் தற்கொலை செய்துகொண்டதாக தளவாய்புரம் போலீசில் பாண்டி செல்வி புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் சந்தனமாரியப்பனின் உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுபற்றி பாண்டிசெல்வியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய ேபாது, என்னுடைய நடத்தையில் எனது கணவர் சந்தேகப்பட்டார். ஆதலால் அவரை கட்டையால் அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை தளவாய்புரம் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்