வார விடுமுறை கொண்டாட்டம் - கடும் குளிரிலும் கொடைக்கானலில் குவிந்த மக்கள்

வார விடுமுறையைத் தொடர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ளனர்.

Update: 2022-11-20 10:37 GMT

கொடைக்கானல்,

விடுமுறை நாட்களில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவது வழக்கம். இந்த நிலையில் வாரத்தின் இறுதி நாளான இன்று தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

கொடைக்கானலில் காலை முதலே மிதமான வெப்பநிலையுடன் கூடிய குளுமையான வானிலை நிலவி வருகிறது. சுற்றுலா பயணிகள் இந்த காலநிலையை அனுபவித்தவாறே மோயர் சதுக்கம், பைன் மரச்சோலைகள், பில்லர் ராக், குணா குகை, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களின் இயற்கை அழகினை ரசித்து வருகின்றனர்.

மேலும் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி, சைக்கிள் மற்றும் குதிரைச் சவாரி செய்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து உற்சாகமடைந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் சிறு, குறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் நகர்ப்பகுதி மற்றும் மலைப்பாதையில் ஆங்காங்கே சிறிதளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் வழக்கமாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்