முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உழைப்புக்கு கிடைத்தது என துரை வைகோ கூறினார்.

Update: 2023-03-03 19:31 GMT

அருப்புக்கோட்டை,

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உழைப்புக்கு கிடைத்தது என துரை வைகோ கூறினார்.

மிகப்பெரிய வெற்றி

அருப்புக்கோட்டையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரைவைகோ கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஈரோட்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈ..வி.கே.எஸ். இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார். இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினின் உழைப்பு ஆகும்.

தற்போது இவர் இந்தியாவின் முன்மாதிரியான முதல்- அமைச்சராக செயல்பட்டு வருகிறார். இதற்கு காரணம் அவரின் செயல்பாடுகள் தான்.

அதிக வாக்குகள்

அதிலும் குறிப்பாக கோடிக்கணக்கான முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்க்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்களை தேடி மருத்துவம், அரசு பள்ளி மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்பதற்கு புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி அவரவர் வங்கி கணக்கில் மாதம் ரூ.ஆயிரம் செலுத்த உத்தரவிட்டுள்ளார்.

ஆட்சி அமைத்து சிறப்பாக ஆட்சி புரிந்தமைக்காக ஒருநற்சான்றிதழாக ஈரோடு இடைத்தேர்தல் வெற்றியை அப்பகுதி மக்கள் வழங்கி உள்ளனர். ஈரோடு வெற்றி குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து கூறுவது கண்ணாடி கூண்டில் இருந்து கல் எரிவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு தேர்தல் வெற்றி என்பது தொகுதி மக்கள் ஏற்கனவே எடுத்த முடிவு என்பதால்தான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்