படப்பை அருகே மதுபானம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

படப்பை அருகே மதுபானம் ஏற்றி வந்த லாரி சாலையோர பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.;

Update:2023-09-21 14:41 IST

காஞ்சீபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியில் உள்ள டாஸ்மாக் குடோனில் இருந்து மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரி அருகே லாரி சென்று கொண்டிருந்தபோது நிலைதடுமாறி சாலையோர பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி கவிழ்ந்ததில் லாரியில் இருந்த மதுபாட்டில் பெட்டிகள் கவிழ்ந்தது.

இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் மற்றும் போக்குவரத்து புலனாய்வுத்துறை போலீசார் விசாரணை நடத்தினர் விசாரணையில் மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரியை ஓட்டி வந்தது ராணிப்பேட்டை மாவட்டம் பாஸ்கரன் (வயது 40) என்பது தெரியவந்தது. லாரி டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதாகவும் 10-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் உள்ள பெட்டிகள் சேதம் அடைந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்