சென்னை வானகரத்தில் தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து

சென்னை வானகரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பிளைவுட் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Update: 2022-08-17 18:28 GMT

சென்னை,

சென்னை வானகரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பிளைவுட் குடோனில் இன்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. சமையல் எண்ணெய் குடோனில் பரவிய நெருப்பு, பிளைவுட் குடோன் உள்பட 3 இடங்களில் பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது.

கோயம்பேடு, மதுரவாயல், பூந்தமல்லி உள்பட 6 நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பிளைவுட் , எண்ணெய் உள்ளிட்டவை கொண்ட குடோன்கள் என்பதால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்