மீஞ்சூரில் மரக்கடையில் பயங்கர தீ விபத்து பொருட்கள் எரிந்து நாசம்

மரக்கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம் .

Update: 2023-07-04 08:15 GMT

மீஞ்சூர் பஜார் வழியாக செல்லும் திருவொற்றியூர் நெடுஞ்சாலையின் அருகில் கவுதம் (வயது 76) என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் மரக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர், வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் நேற்று காலை மரக்கடைக்குள் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. கட்டுக்கடங்காத தீ மளமளவென கடை முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 2 வாகனங்களில் வந்த வடசென்னை அனல் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீக்கட்டுக்குள் அடங்காததால் பொன்னேரி மற்றும் மணலி ஆகிய இடங்களில் இருந்து கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மரங்கள், மர சாமான்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. மேலும், மரக்கடை அருகே இருந்த டில்லிபாபு என்பவரது வீட்டில் தீ பரவியதால் வீட்டில் இருந்த கட்டில் மெத்தை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது.

சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் செல்வகுமார், மீஞ்சூர் போலீசார் நடத்திய விசாரணையில் மின் கசிவால் இந்த விபத்து நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த தீ விபத்தில் கடையின் மேல்தளத்தில் வசித்து வந்த கடை உரிமையாளர் கவுதம் மற்றும் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்