நீச்சல் பழக சென்ற வாலிபர் கிணற்றில் மூழ்கி பலி
அரக்கோணத்தில் நீச்சல் பழக சென்ற வாலிபர் கிணற்றில் மூழ்கி பலியானார்.
அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் தாமோதரன் (வயது 23). தச்சு வேலை செய்து வந்தார். நேற்று மாலை தனது நண்பர்களுடன் அரக்கோணம் அடுத்த அம்மனூர் தேவதானம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் நீச்சல் பழக சென்றுள்ளார். நீச்சல் பழகிக்கொண்டிருந்த போது திடிரென தாமோதரன் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த அரக்கோணம் டவுன் போலீசார், தாமோதரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.