ஆஸபத்திரியில் செல்போன் திருடிய வாலிபர் கைது

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-23 20:22 GMT

திசையன்விளையை சேர்ந்தவர் ஆரோக்கிய சுதர்சன். இவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உறவினர் ஒருவரை பார்க்க வந்தார். பின்னர் இரவு நேரம் ஆனதால் அங்கேயே அவர் படுத்து தூங்கினார். அப்போது அங்கு வந்த மர்மநபர், ஆரோக்கிய சுதர்சனின் செல்போனை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், செல்போனை திருடி சென்றது பேட்டை உரக்கடை தெருவை சேர்ந்த முகமது அபூபக்கர் (வயது 25) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மீட்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்