வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு

வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு

Update: 2022-12-25 18:45 GMT

கோவை

கோவை கரும்புகடையை சேர்ந்தவர் அசரப் அலி (வயது 26). நகைக்கடை ஊழியர். இவர் நேற்று முன்தினம் உக்கடம்-பேரூர் பைபாஸ் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் திடீரென்று அசரப் அலியை வழிமறித்து பணம் தரும்படி கேட்டார். அதற்கு அசரப் அலி தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்து அந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காண்பித்து அவரை மிரட்டியதுடன், செல்போன் மற்றும் 500 ரூபாயை பறித்து கொண்டு தப்பி ஓட முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அசரப் அலி திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வருவதற்குள், அந்த நபர் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து அசரப் அலி, பெரிய கடை வீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அசரப் அலியை கத்தியை காண்பித்து மிரட்டியது கவுண்டம்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சிவா(38) என்பது தெரியவந்தது. இதையடுத்து சிவாவை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்