வெளி மாநில மது பாக்கெட் விற்பனை செய்த வாலிபர் கைது
ஜோலார்பேட்டை அருகே வெளி மாநில மது பாக்கெட் விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டை மற்றும் பல்வேறு பகுதிகளில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜோலார்பேட்டை அடுத்த கருப்பனூர் பகுதியில் முட்புதரின் அருகில் சாராயம் மற்றும் வெளிமாநில பாக்கெட் மது விற்பனை செய்த அதேப்பகுதியை சேர்ந்த தென்னரசு (வயது 37) என்பவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து இரண்டு லிட்டர் சாராயம், 19 வெளி மாநில மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.