கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது

Update: 2023-01-11 18:45 GMT

நீடாமங்கலம் வட்டம் ஒளிமதி கிராமம் வடக்குத்தெருவைச்சேர்ந்த அம்பிகாபதி மகன் அன்புச்செல்வன் (வயது23). நேற்றுமுன்தினம் மதியம் இவர் ஒளிமதி பஸ் நிறுத்த பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பொதக்குடி காந்தி காலனி தெருவைச்சேர்ந்த தமிழழகன் (30) என்பவர் அன்புச்செல்வனை கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.200-ஐ பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அன்புச்செல்வன் நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்