மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.

Update: 2023-09-04 19:29 GMT

வள்ளியூர் (தெற்கு):

கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் தொட்டிபாலம் உத்திரச்சனிவிளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ். இவரது மகன்கள் நாகராஜன் (வயது 25), விஷ்ணு (22). அதே பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் மகன் பிரின்ஸ். இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை நாகராஜன் ஓட்டினார்.

வள்ளியூர் புறவழிச்சாலையில் வந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்திச் செல்ல முயன்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே வாகன வேகங்களை குறைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது. அதில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு, படுகாயம் அடைந்தனர். எனினும் இந்த விபத்தில் நாகராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து வள்ளியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படுகாயம் அடைந்த விஷ்ணு, பிரின்ஸ் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான நாகராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்