தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

காதல் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-07 19:49 GMT

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள ஆனையூர் பிள்ளைமார் கோவில் கிழக்கு தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் நரேஷ் (வயது 22). இவருக்கும் விஸ்வநத்தத்தை சேர்ந்த தெய்வவிநாயகம் மகள் சிவசந்தியா என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சிவசந்தியா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் பெரியோர்கள் சமாதானம் செய்து வைத்து கடந்த 2 வாரத்திற்கு முன்பு கணவன், மனைவி மீண்டும் சேர்ந்து வாழ தொடங்கினர். இந்தநிலையில் நேற்று மதியம் கணவன், மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது சிவசந்தியா தனது குழந்தையை தூக்கி கொண்டு வெளியே சென்றதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நரேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செல்வகுமார் கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்