வில்லுக்குறியில் துப்பாக்கியுடன் சிக்கிய வாலிபரால் பரபரப்புபோலீசார் விசாரணை

வில்லுக்குறியில் துப்பாக்கியுடன் சிக்கிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-05-05 19:15 GMT

திங்கள்சந்தை,:

வில்லுக்குறியில் துப்பாக்கியுடன் சிக்கிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரகசிய தகவல்

இரணியல் போலீஸ் சரகம் வில்லுக்குறியில் ஒரு வாலிபரிடம் துப்பாக்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று அந்த வாலிபரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். தொடர்ந்து அவரை துப்பாக்கியுடன் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

அவரிடம் இருந்த துப்பாக்கி குறித்தும், அதை எதற்காக வைத்துள்ளார் என்றும் விசாரணை நடத்தினர்.

பொம்மை துப்பாக்கி

விசாரணையில் அந்த வாலிபரிடம் இருந்தது பொம்மை துப்பாக்கி என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் எழுதி வாங்கி விட்டு அவரை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொம்மை துப்பாக்கியுடன் வாலிபர் போலீசில் சிக்கிய சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்