பாட்டிலால் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி

நாகையில் பாட்டிலால் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி

Update: 2023-06-27 18:45 GMT


நாகை செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தமிழ்வீரன் (வயது 25). இவர் மீது நாகை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் சாராயம் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் திருமணத்திற்கான பிளக்ஸ் அடிக்க நேற்று நாகை கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்வீரன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்ற தனிப்படை போலீசார் தமிழ்வீரனை சோதனை செய்வதற்காக வழிமறித்தனர். போலீசாரை பார்த்த தமிழ்வீரன் மோட்டார் சைக்கிளை அங்கேயே கீழே போட்டு விட்டு அருகில் இருந்த வயலில் இறங்கி தப்பியோடினார். பின்னர் தப்பியோடிய தமிழ்வீரன் வயலில் கிடந்த பாட்டிலை எடுத்து தனது கழுத்து பகுதியில் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைபார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்